மாரி செல்வராஜின் அடுத்த அவதாரமான “மாமன்னன் “ FIRST லுக் போஸ்டர் வெளியானது

mamannan mamannanfirstlook mariselvarajudhayanidhi
By Swetha Subash Mar 04, 2022 10:52 AM GMT
Report

'மாமன்னன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.

தமிழில் கதிர் மற்றும் ஆனந்தி நடிப்பில் வெளியான பரியேறும் பெருமாள், தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் ஆகிய படங்களை இயக்கி இந்திய சினிமாவே திரும்பி பார்க்கும் வகையில் தனக்கான தடத்தை பதித்தவர் இயக்குனர் மாரி செல்வராஜ்.

இவர் அடுத்ததாக இயக்கவுள்ள படம் தான் மாமன்னன்.

மாரி செல்வராஜின் அடுத்த அவதாரமான “மாமன்னன் “ FIRST லுக் போஸ்டர் வெளியானது | Mamannan Movie First Look Poster Released

நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோர் நடிக்கவுள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தான் தற்போது வெளியாகியுள்ளது.

போஸ்டரில் பெரிய பாறையைச் சுற்றி காளைகள் மற்றும் காகங்கள் இடம் பெற்றுள்ளன.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிர செய்துள்ள இந்த போஸ்டர் தான் கோலிவுட்டின் ஹாட் டாக்காக பேசப்பட்டு வருகிறது.

மேலும் இந்த படம் தான் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் எனவும் இதற்கு பின் அவர் முழுநேர அரசியலில் ஈடுப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.