யுவனின் மயக்கும் குரலில் வெளியான மாமனிதன் படத்தின் 2வது பாடல்...

ILAYARAJA Vijay sethupathi Mamanithan Yuvan shankar raja
By Petchi Avudaiappan May 28, 2021 09:40 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தின் இரண்டாவது படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. 

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்துள்ள படம் மாமனிதன். தென்மேற்கு பருவக்காற்று, இடம் பொருள் ஏவல், தர்மதுரை ஆகிய படங்களுக்கு பிறகு இந்த கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ளது. ஹீரோயினாக காயத்ரி நடிக்க, இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். 

கொரோனா காரணமாக இதன் ரிலீஸ் தேதி தள்ளி போய்க் கொண்டிருக்கும் நிலையில், தட்டிப்புட்டா தட்டிப்புட்டா என்ற முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

யுவனின் மயக்கும் குரலில் வெளியான மாமனிதன் படத்தின் 2வது பாடல்... | Mamanithan 2Nd Single Released

இந்நிலையில் படத்தின் இரண்டாவது படம் இன்று வெளியாகியுள்ளது. ஏ ராசா என தொடங்கும் இந்த பாடலை இளையராஜா இசையமைக்க யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். இந்த பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.