? Live: மாமல்லபுரம், இசிஆர் சாலையில் தமிழக அரசு பேருந்துகள் நிறுத்தம் - அமைச்சர் அறிவிப்பு

Government of Tamil Nadu Chennai TN Weather Weather Mandous Cyclone
By Thahir Dec 09, 2022 08:30 AM GMT
Report

மாமல்லபுரம், இசிஆர் சாலையில் அரசு பேருந்துகள் 4 மணி நேரத்திற்கு நிறுத்தப்படுவதாக அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

சென்னையை நெருங்கும் புயல் 

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் தீவிரம் அடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகருகிறது.

கடந்த 5ம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன்தினம் காலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டிருந்தது.

பின்னர் வட-மேற்கு திசையில் நகர்ந்து, நேற்று அதிகாலை புயலாக வலுப்பெற்றது.இந்த புயலுக்கு மாண்டஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புயல் சென்னையில் இருந்து 260 கிமீ தொலையில் உள்ளது.இதையடுத்து காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

பேருந்து சேவை நிறுத்தம் 

மாண்டஸ் புயல் சென்னையில் இருந்து 260 கிமீ துாரத்திலும், காரைக்காலில் இருந்து 180 கிமீ துாரத்தில் நிலவி வருகிறது.

இந்த நிலையில் புதுச்சேரியில் இருந்து சென்னை இயக்கப்படும் அரசுப் பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

Mamallapuram, Tamil Nadu Government Bus Stand on ECR Road

இந்நிலையில், மாமல்லபுரம் - இசிஆர் சாலையில் புயல் கரையை கடக்கும் போது முன்பு 2 மணி நேரமும், பின்பு 2 மணி நேரமும் பேருந்து சேவை நிறுத்தப்படும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.