நோ என்ட்ரியில் சென்ற கார் - தடுத்த காவலாளி மீது பெண்கள் கொடூர தாக்குதல்

Tamil nadu Chennai Chengalpattu
By Karthikraja Oct 21, 2024 09:55 PM GMT
Report

 நோ என்ட்ரியில் சென்ற காரை தடுத்த காவலாளி மீது பெண்கள் உட்பட 4 பேர் சேர்த்து கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நோ என்ட்ரி

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்துக்கு ஞாயிற்றுகிழமை(20.10.2021) ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். 

மாமல்லபுரத்தில் தாக்குதல்

இந்நிலையில், ஐந்துரதம் புராதன சின்னம் அருகில் 2 பெண்கள் உள்பட 4 பேர் கொண்ட குடும்பத்தினர் இருந்த கார் ஒன்று அங்கு நோ என்ட்ரி வழியாக சென்று காரை பார்க் செய்ய செய்ய முயன்றது. 

உதயநிதியை கூப்பிடுறேன் பாக்குறீயா..நடுரோட்டில் போலீசாரை கேலி செய்த ஜோடி!

உதயநிதியை கூப்பிடுறேன் பாக்குறீயா..நடுரோட்டில் போலீசாரை கேலி செய்த ஜோடி!

தாக்குதல்

அங்கு பணியிலிருந்த தனியார் காவலாளி ஏழுமலை என்பவர், நோ என்ட்ரி வழியாக கார் செல்லக்கூடாது எனக்கூறி காரை வழி மறித்து நின்றார். ஆனால் அவர் மீது காரை ஏற்றுவது போல், நோ என்ட்ரி வழியா செல்ல முயன்றனர்.

mamallapuram attack

இதனால், காரில் வந்தவர்களை நோக்கி ஏழுமலை ஏதோ திட்டியதாக தெரிகிறது.இதில் ஆத்திரமடைந்த பெண் காரில் இருந்து இறங்கி காவலாளி ஏழுமலையை தாக்க, பதிலுக்கு அவரும் தாக்க முயன்றார். உடனே காரில் இருந்த 2 பெண், 2 ஆண் என 4 பேரும் சேர்ந்து ஏழுமலையை கடுமையாக தாக்கினர்.

மேலும், காவலரிடமிருந்த 2 அடி நீளம் கொண்ட பிளாஸ்டிக் பைப்பை பிடுங்கி, அந்த பைப் உடையும் அளவுக்கு அவரை தாக்கினர். இந்த தாக்குதலில் அவரது சட்டையை கிழித்தனர். இந்த தாக்குதல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.