24 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் நிகழ்ந்த மாற்றம் : தலைவரானார் மல்லிகார்ஜுன கார்கே

Indian National Congress
By Irumporai Oct 19, 2022 10:00 AM GMT
Report

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார்.

காங்கிரஸ் கட்சி தேர்தல்

இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து, கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த 17-ந்தேதி தேர்தல் நடத்தப்பட்டது. 

மல்லிகார்ஜுன கார்கேவும், சசிதரூரும் போட்டியிட்டனர். நாடு முழுவதும் 68 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. 9 ஆயிரத்து 915 மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் ஓட்டுப்போட தகுதி பெற்றிருந்தனர்.

24 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் நிகழ்ந்த மாற்றம் : தலைவரானார் மல்லிகார்ஜுன கார்கே | Mallikarjuna Kharge Won The Congress Election

அவர்களில் 9 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் வாக்களித்தனர். ஓட்டு பதிவு முடிவடைந்தது டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்துக்கு வாக்கு பெட்டிகள் நேற்று கொண்டு செல்லப்பட்டது.

தலைவரானார் மல்லிகார்ஜுன கார்கே

அங்கு ஓட்டுப்பெட்டிகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டு, பாதுகாப்பு பெட்டக அறையில் வைக்கப்பட்டது. 

இந்தநிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டனர். இதில் 7 ஆயிரத்து 897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே அபார வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் 1000 வாக்குகள் பெற்று தேல்வியடைந்தார். 416 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றிபெற்றதை அடுத்து காங்கிரஸ் வரலாற்றில் 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவர் ஆகியுள்ளார்.