காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுனே கார்கே இன்று பதவியேற்பு

Indian National Congress
By Thahir Oct 26, 2022 04:29 AM GMT
Report

இன்று டெல்லியில் நடைபெறும் விழாவில் காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுனே கார்கே பதவியேற்கிறார்.

மல்லிகார்ஜுனே கார்கே இன்று பதவியேற்பு 

காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தல் கடந்த 17-ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், 19-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் பதிவான 9500 வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மல்லிகார்ஜுன கார்கே 7,897 வாக்குகள் பெரும்பான்மையோடு வெற்றி பெற்றார்.

mallikarjun-kharge-in-as-congress-president-today

சசிதரூர் 1,072 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இதனையடுத்து மல்லிகார்ஜுன கார்கே தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், இன்று டெல்லியில் நடைபெறும் விழாவில் காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுனே கார்கே பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு நிகழ்வில் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.