நடுராத்திரியில் ஹீரோ கூப்பிட்டா போகணும் - கமல் பட நடிகை ஓபன்டாக்!
நடுராத்திரி ஹீரோ கூப்பிட்டால் ஹீரோயின் போக வேண்டுமென நடிகை மல்லிகா ஷெராவத் தெரிவித்துள்ளார்.
நடிகை மல்லிகா ஷெராவத்
பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத். கவர்ச்சி கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்த இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தமிழில் தசாவதாரம் படத்தின் மூலம் அறிமுகமானார். ஃப்ளெட்சர் கமல் ஹாசனுக்கு ஜோடியாக இடம்பெற்றிருந்தார்.
இதற்கிடையில் குரு படத்தில் மையா மையா பாடலுக்கு நடனமாடியிருப்பார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், நான் அட்ஜெஸ்ட்மெண்ட்டை ஒத்துக்கொள்வதில்லை. வேறு ஒருவரி பாலியல் ஆசைக்கு நான் ஆளாக விரும்பவில்லை.
அட்ஜெஸ்ட்மெண்ட்
ஒரு ஹீரோ உங்களை நள்ளிரவு அவரது வீட்டுக்கு வர சொன்னால் நீங்கள் செல்ல வேண்டும். அப்போதுதான் நீங்கள் அந்த ஹீரோவின் நட்பு வட்டத்தில் இருக்க முடியும். அவர் அழைக்கும்போது நீங்கள் செல்லவில்லை என்றால் அந்தப் படத்திலிருந்து தூக்கி எறியப்படுவீர்கள்.
அட்ஜெஸ்ட் செய்யும் நடிகைகளைத்தான் அவர்களுக்கு பிடிக்கும். ஆனால் எனக்கு அது பிடிக்காது. சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க முயற்சி செய்தேன்.
ஆனால் நானும் சில தவறுகளை செய்திருக்கிறேன். சில கதாபாத்திரங்கள் நல்லபடியாக அமைந்தன. சில கதாபாத்திரங்கள் அமையவில்லை. இருந்தாலும் எனது திரைப்பயணம் சிறப்பானதாகவே இருந்தது" எனத் தெரிவித்துள்ளார்.