அடடே... ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகளை பெற்றெடுத்த பெண்!

Pregnancy Guinness World Records Africa
By Sumathi Dec 24, 2022 05:41 AM GMT
Report

ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகளை பெற்றெடுத்த ஆப்பிரிக்க பெண் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

ஒரே பிரசவம்      

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியை சேர்ந்த ஹலிமா சிஸ்ஸே - அப்தெல் காதர் அபி(26), தம்பதிக்கு, மொராக்கோ மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஒரே பிரசவத்தில் 5 பெண் குழந்தைகளும், 4 ஆண் குழந்தைகளும் பிறந்துள்ளன. குழந்தைகள் பிறந்து 20 மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில்,

அடடே... ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகளை பெற்றெடுத்த பெண்! | Mali Women Delivers 9 Babies World Record Guinness

கடந்த சில வாரங்களுக்கு முன்புவரை சிறப்பு மருத்துவ குழுவினரால் தாயும், குழந்தைகளும் மருத்துவமனையிலேயே தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தனர். தற்போது அவர்கள் மருத்துவமனையின் ஒப்புதலுடன் மாலிக்கு திரும்பி உள்ளனர். இதுகுறித்து அம்மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள்

9 குழந்தைகள்

, ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகள் பிறப்பதென்பது மிகவும் அரிதான நிகழ்வு, மேலும் அவ்வாறு பிறக்கும் குழந்தைகள் சில மணி நேரங்களில் இறந்து விடவும் வாய்ப்பு உண்டு, தாய்-சேய் உயிருக்கும் ஆபத்து அதிகம் என்று கூறினர்.

ஏற்கெனவே நடாலி சுலேமான் என்ற பெண், ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகள் பெற்று உலக சாதனை படைத்திருந்த நிலையில் தற்போது ஹலிமா சிஸ்ஸே 9 குழந்தைகள் பெற்று அதனை முறியடித்துள்ளார்.

இந்தியாவில் “நாம் இருவர் நமக்கிருவர்” என்னும் நிலை மாறி தற்போது “நாம் இருவர் நமக்கொருவர்” என்ற நிலை இருக்கையில் ஆப்பிரிக்காவில் நிகழ்ந்த இந்நிகழ்வு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.