சுற்றுலா பயணிகளை அதிகமாக அனுப்புங்க - சீனாவுக்கு மாலத்தீவு வேண்டுகோள்!

China Maldives
By Sumathi Jan 10, 2024 09:34 AM GMT
Report

மாலத்தீவு அதிபர் அதிக சுற்றுலா பயணிகளை அனுப்ப சீனாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாலத்தீவு

இந்தியாவிற்கு அருகில் இருக்கும் ஒரு சுற்றுலா தலமாக மாலத்தீவு உள்ளது. சமீபத்தில் லட்சத்தீவு பயணம் குறித்த அனுபவங்களைத் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்களாக பிரதமர் மோடி பகிர்ந்தார்.

maldives

இந்த புகைப்படங்கள் வைரலாகி வந்த நிலையில் மாலத்தீவு நாட்டின் அமைச்சர்கள் பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் இந்தியா மாலத்தீவை குறிவைக்கிறது, மாலத்தீவுக்குப் பதிலாக லட்சத்தீவை புதிய சுற்றுலாத் தலமாக மாற்றப் பிரதமர் மோடி முயல்கிறார் என விமர்சித்தனர்.

அந்த விஷயத்தில் மாலத்தீவில் முதலிடம் பிடித்த இந்தியர்கள் - அதுவும் லட்சக்கணக்கில்!

அந்த விஷயத்தில் மாலத்தீவில் முதலிடம் பிடித்த இந்தியர்கள் - அதுவும் லட்சக்கணக்கில்!

சீனாவுக்கு வேண்டுகோள்

இதனால் இருநாடுகளுக்கும் இடையே சர்ச்சை எற்பட்டது. தொடர்ந்து, சர்ச்சைக்குள்ளாகும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட மூன்று அமைச்சர்களை மாலத்தீவு அரசு இடைநீக்கம் செய்தது. இதன் காரணமாக இந்தியர்கள் மாலத்தீவு செல்லும் பயணத்தை ரத்து செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

Maldives President

இந்நிலையில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சீனாவுக்கு 5 நாள் பயணமாக சென்றுள்ளார். மேலும் அங்கு பிஜின் மாகாணத்தில் நடைபெற்ற மாலத்தீவு வர்த்தக மன்றத்தில் பேசிய போது, சீனா எங்களின் நெருங்கிய நட்பு நாடு. மாலத்தீவின் வளர்ச்சி பங்காளிகளில் ஒன்றாக உள்ளது என்று குறிப்பிட்டார்.

மேலும், சீனா சுற்றுலா வணிகத்தில் கொரோனவுக்கு முன்பு வரை முதலிடத்தில் இருந்தது. அதே நிலையை மீண்டும் தொடர அதிக அளவில் பயணிகளை மாலத்தீவுக்கு அனுப்ப வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.