ஆளும் கட்சி, எதிர்கட்சி எம்.பிக்கள் மோதல்; நாடாளுமன்றத்தில் பரபரப்பு - வைரலாகும் Video!
மாலத்தீவு நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் மோதிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சிறப்பு கூட்டம்
மாலத்தீவில் அதிபர் முகமது முய்சு தலைமையிலான மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள முய்சு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்நிலையில் மாலத்தீவு நாடாளுமன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்கு ஒப்புதல் அளிக்க சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
மோதல்
அப்போது விவாதத்தின்போது, ஆளுங்கட்சி மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள், ஆளும் கட்சியின் ஆதரவு பெற்ற மாலத்தீவு முற்போக்கு எம்.பி.க்களுக்கும் எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி எம்.பி.க்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டு, அது மோதலாக மாறியது. இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
?Breaking News: Brawl in Maldivian Parliament, Opposition Against Approval Of Muizzu's Cabinet:#Maldives pic.twitter.com/BadDctVW4K
— Gayatri ????(BharatKiBeti) (@changu311) January 28, 2024