மலேசியாவின் மானத்தையே வாங்கி விட்டார் - “பிக்பாஸ் நாடியா சாங்” மீது பரபரப்பு குற்றச்சாட்டு

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர் நாடியா சாங் மீது ரசிகர் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். 

 விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ரசிகர்களை கவர்ந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 18 போட்டியாளர்களில் முதல் ஆளாக உடல் நலக்குறைவால் திருநங்கை நமீதா மாரிமுத்து வெளியேறினார். 

இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் நடைபெற்ற எலிமினேஷன் போட்டியில் மலேசிய நாட்டை சேர்ந்த தமிழ் பிரபலமான நடியா சாங் வெளியேற்றப்பட்டார். இதனிடையே நபர் ஒருவர், நாடியா சாங்ஒட்டுமொத்த மலேசியாவின் மானத்தையே வாங்கி விட்டதாக குற்றம்சாட்டி பேசும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் கடந்த வாரம் கதை சொல்லும் டாஸ்க்கில் நாடியா சொன்ன கதையை குறிப்பிட்டு  18 வயதிற்கு குறைவாக இருக்கும் போது வெளியே வேலை கிடைத்து இருக்காதே. எப்படி சிறு வயதிலேயே (14 வயது) ஹோட்டலில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்தீர்கள்.? . பிடிபட்டால் கூட மரியாதையாக நடத்தும் மலேசிய போலீசார் எந்த காலத்தில் சிறு பிள்ளையை அதுவும் பெண் பிள்ளையை அடித்து துன்புறுத்தும் கீழ்தரமான செயலில் ஈடுபட்டார்கள்? . மொத்தமாக மலேசியன் போலீசையே அசிங்கப்படுத்தி, அவனமானப்படுத்தி உள்ளீர்கள்.

அப்படி ஒருவேளை நீங்கள் உண்மையிலேயே மலேசிய போலீசாரிடம் அடி வாங்கி இருந்தால் அந்த அளவிற்கு நீங்கள் என்ன பெரிய கேஸில் சிக்கினீர்கள். அதே போல உங்கள் அம்மா உங்களை படிக்க வைக்கவில்லை என்று சொல்கிறீர்கள். படிக்காமல் நல்ல வேலையில் அமர்ந்து கை நிறைய ஊதியம் வாங்கியது எப்படி என்றும் அந்த மலேசிய தமிழர் சரமாரியாக கேள்விகளை அடுக்கி இருக்கிறார்.

அதே போல முன்னாள் பிக்பாஸ் பங்கேற்பாளரான முகென் ராவ் அவர்களின் ரூட்டையே நீங்களும் ஃபாலோ செய்ய நினைத்து இது மாதிரியான பொய் கதைகளை சொல்கிறீர்களா என்றும் நாடியா சங்கிற்கு அந்த மலேசிய தமிழர் கேள்வி எழுப்பி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

Review and reveal the Fake Story of Nadia Chang(AHFAT)

Review and reveal the Fake Story of Nadia Chang(AHFAT) #BiggBoss5Tamil #nadiachang https://youtu.be/dTzBbjPd_oA 🤞

Posted by BiggBoss on Friday, October 15, 2021

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்