மொத்த டிக்கெட்டையும் வாங்கி தியேட்டரில் பெண் செய்த செயல் - கொந்தளித்த நெட்டிசன்கள்!
அனைத்து டிக்கெட்டுகளையும் வாங்கி தியேட்டரில் பெண் தனியாக படம் பார்த்துள்ளார்.
பெண் செய்த செயல்
மலேசியா நாட்டைச் சேர்ந்தவர் எரிக்கா பைதுரி. இந்த பணக்கார பெண் சமீபத்தில் டிக்-டாக் தளத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.
அதில், தியேட்டரில் அனைத்து இருக்கைகளையும் முன்படதிவு செய்து தனி ஆளாக படம் பார்ப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. அந்த மினி தியேட்டரின் 10 வரிசையில் 16 இருக்கைகள் இருந்தன. அனைத்தும் காலியாக காணப்பட்டன.
திட்டித்தீர்த்த நெட்டிசன்கள்
அந்த பெண் பாப்கார்ன் சாப்பிட்டு கொண்டு கண்ணாடி அணிந்திருந்தார். தொடர்ந்து, வீடியோவுடன் வெளியிட்ட பதிவில் 'நாங்கள் உள்முக சிந்தனை கொண்டவர்கள். எனவே நாங்கள் அனைத்து இருக்கைகளையும் வாங்கினோம்' எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில், தனது வசதியை காட்டிக்கொள்வதாக பலர் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.
அதன்பின், இதுகுறித்து பேட்டியளித்த அந்த பெண் “இந்த வீடியோ, ஒரு கேலிக்காக எடுக்கப்பட்டது. ஆனால், அது எதிர்பாராதவிதமாக வைரலானது. இதுகுறித்து நெட்டிசன்கள் பலவாறு கமெண்டுகள் செய்திருந்தனர். அது அனைத்தும் வேடிக்கையாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.
அதனால்தான் அந்த வீடியோவை அப்படியே இணையதளத்தில் விட்டுவிட்டேன். என்னை எப்படித் திட்டினாலும் அவர்களை மன்னிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.