சிவாஜி திரைப்பட மேனரிஸத்தில் ரஜினியை வரவேற்ற மலேசிய பிரதமர் - வைரலாகும் வீடியோ !
மலேசிய பிரதமர் நடிகர் ரஜினிகாந்தை வரவேற்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த்
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் அண்மையில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. மேலும் ரூ. கோடி வசூல் சாதனையும் படைத்தது.
இதனைத் தொடர்ந்து இமாலய சென்ற ரஜினிகாந்த், திரும்பி வரும்போது உத்திரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அவரின் வீட்டிற்கே சென்று சந்தித்தார். அந்த சந்திப்பின் போது ரஜினிகாந்த், யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
பிரதமருடன் சந்திப்பு
இந்நிலையில் தற்போது ரஜினிகாந்த் மலேசியா சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை நேரில் சந்தித்தார். ரஜினியை வரவேற்கும்போது, சிவாஜி திரைப்படத்தில் இடம்பெற்ற 'மொட்டை பாஸ்' மேனரிஸத்தை செய்து காண்பித்தவாறே,
பிரதமர் அன்வர் இப்ராஹிம், ரஜினியை வரவேற்றார். இதுகுறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி கலக்கி வருகிறது. இந்த சந்திப்பை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அன்வர் இப்ராஹிம் "உலக அரங்கில் புகழ்பெற்ற நடிகர் ரஜினிகாந்த்தை இன்று சந்தித்தேன். திரையுலகில் அவர் சிறந்து விளங்க பிரார்த்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
Thalaivar @rajinikanth meets the Prime Minister Of Malaysia @anwaribrahim #Thalaivar171 #SuperStarRajinikanth? #MalaysianPrimeMinister #cineulagam #Jailer #Thalaivar #Malaysia #Rajinifc pic.twitter.com/K4hQOMcxKu
— Cineulagam (@cineulagam) September 11, 2023