என் நண்பன் விஜய் .. மலேசிய பிரதமரிடம் இருந்து முதல்வர் விஜய்க்கு வந்த வாழ்த்து

Vijay Tamil nadu Malaysia India World
By Vinoja May 24, 2026 03:10 AM GMT
Report

மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம், தனது நெருங்கிய நண்பரும் தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சட்டசபைத் தேர்தலில் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்காக மீண்டும் ஒருமுறை தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மலேசியப் பிரதமர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தி, சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வருகின்றது.

என் நண்பன் விஜய் .. மலேசிய பிரதமரிடம் இருந்து முதல்வர் விஜய்க்கு வந்த வாழ்த்து | Malaysia Pm Anwar Ibrahim Calls Cm Vijay

மலேசியப் பிரதமரின் தனது பதிவில் குறிப்பிடுகையில், "இன்று எனது நண்பரும், தமிழக முதலமைச்சருமான விஜய்யிடம் தொலைபேசியில் பேசி மகிழ்ந்தேன்.

தமிழக மக்களுக்காக அவர் ஏற்றுள்ள இந்த மிகப் பெரிய பொறுப்பிற்கு எனது வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொண்டேன். தமிழக மக்களின் நல்வாழ்விற்காகவும், மாநிலத்தின் மிகச் சிறந்த எதிர்காலத்திற்காகவும் மிகச் சிறப்பாக ஆட்சி நடத்தவும், வழிநடத்தவும் எனது நண்பர் முதல்வர் விஜய்க்குத் தேவையான வலிமையும், ஞானமும் தொடர்ந்து கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.