ஆப்கான் கூட்டத்தில் மலையாளிகள்.. சசிதரூர் வீடியோவால் பரபரப்பு!

afghanistan taliban Shashi Tharoor
By Irumporai Aug 17, 2021 08:27 PM GMT
Report

ஆப்கானை கைப்பற்றியுள்ள தாலிபான்கள் இயக்கத்தில் கேராளவை சேர்ந்த 2 பேர் இருப்பதாக சசிதரூர் எம்பி வீடியோ டிவிட்டரில் பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்கானில் அமெரிக்கப் படைகள் வெளியானதும் தாலிபான்கள் ஆட்சியமைத்துள்ளதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது, இந்த நிலையில் ரமீஸ் என்பவரின் ட்விட்டரில் இருந்து ஒரு வீடியோ பகிரப்பட்டது.

அதில் காபூலை கைப்பற்றிய தலிபான் இயக்கத்தினர் வெற்றி களிப்புடன் பேசும் வீடியோ. அதில், ஒருவர் சம்சாரிக்கட்டேஎன மலையாளத்தில் பேசும் சத்தம் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடியோவை சுசிதரூர் எம்பி தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள நிலையில் காபூலை கைப்பற்றியுள்ள தலிபான் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மலையாளத்தில் பேசுவது தெரிய வந்துள்ளது.

ஒருவர் மலையாளத்தில் பேசும்போது இன்னொருவர் அதை ஆமோதிக்கிறார். எனவே அந்த இடத்தில் குறைந்தது 2 மலையாளிகள் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். தலிபான் இயக்கத்தில் மலையாளிகள் இடம் பெற்றிருப்பதாக சசிதரூர் எம்பி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.