மலையாள திரையுலகில் சோகம் .. பிரபல ஒளிப்பதிவாளர் தந்தை மரணம்!
பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் தந்தை சிவன் மாரடைப்பால் காலமானார்.
தளபதி, ரோஜா, இருவர், துப்பாக்கி, செக்க சிவந்த வானம் உள்ளிட்ட பல முக்கிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் சந்தோஷ் சிவன்.
இவரின் தந்தை சிவன், மலையாள திரையுலகில் பிரபல ஒளிப்பதிவாளர் அபயம், யாகம், உள்ளிட்ட படங்களைய மலையாளத்தில் இயக்கியுள்ளார்.
புகைப்படக் கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கிய சிவன்இதுவரை மூன்று முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார்.
இந்த நிலையில்சிவனுக்கு நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் நள்ளிரவு 12 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
சிவனின் மறைவையடுத்து அவரது குடும்பத்துக்கு திரையுலகினர் தங்களது ஆறுதலை தெரிவித்து வருகின்றனர் இந்த சமபவம் மலையாள திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.