ஹோட்டலில் அஜித்தின் அந்த செயல்; எல்லாரும் ரசிகர்களா மாறிட்டாங்க - மலையாள நடிகர் பெருமிதம்!
மலையாள நடிகரும், பாடகருமான வினீத் ஸ்ரீனிவாசன் நடிகர் அஜித்தை சந்தித்தது குறித்து பேசியுள்ளார்.
வினீத் ஸ்ரீனிவாசன்
மலையாள திரையுலகில் நடிகரும், பாடகரும், இயக்குநருமாக இருப்பவர் வினீத் ஸ்ரீனிவாசன். இவர் பிரபல நடிகர் ஸ்ரீனிவாசனின் மகன் ஆவார். ஆரம்பத்தில் பாடகராக அறிமுகமாகி பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
தமிழிலும் பாடியுள்ளார். பின்னர் 'சைக்கிள்' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி, தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இவர் ஒரு மலையாள டிவி நிகழ்ச்சியில் நடிகர் அஜித்தை சந்தித்தது குறித்து பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது "நான் ஒருமுறை சென்னையில் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட சென்றேன். அப்போது எனது பக்கத்து டேபிளில் அஜித் சார் உட்கார்ந்திருந்தார். நான் அவருடைய மிகப்பெரிய ரசிகன். எனக்கு தமிழில் பிடித்த நடிகர் என்றால் அவர்தான். இதற்கு முன்னர், ஒரு 18 வருடங்களுக்கு முன் அஜித்தை நான் சந்தித்துப் பேசியுள்ளேன்.
பேட்டி
இம்முறை சந்தித்தபோது என்னைப் பற்றி அவரிடம் "சார்.. நான் ஒரு மலையாள நடிகர் மற்றும் பாடகர், இதற்கு முன் ஒருமுறை உங்களை சந்தித்துள்ளேன்" என்று அஜித்திடம் என்னை அறிமுகம் செய்தேன். உடனே அஜித் "ஆமாம், நாம் இதற்கு முன் ஒரு முறை கோயம்பேட்டில் வைத்து சந்தித்துள்ளோமே" என்று அஜித் என்னிடம் கூறினார்.
நான் அதைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்து விட்டேன். நாம் அஜித்திடம் கற்றுக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் என்னவென்றால். நான் சாப்பிட அமர்ந்திருந்த போது, எனது குழந்தையை தொழில் போட்டிருந்தேன். அஜித் சாப்பிட்டு எழுந்து எங்களிடம் வந்தார். டேபிளில் என்னுடன் வந்திருந்தவர்கள் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
அவர்கள் யாருமே அஜித்திடம் பேசக்கூட இல்லை. நான் மட்டும்தான் பேசினேன். இருந்தும் கூட அஜித் அமர்ந்திருந்த எல்லோருக்கும் பாய் என்று சொல்லிவிட்டுச் சென்றார். அப்போதிலிருந்து அங்கிருந்த அனைவரும் அஜித்தின் ரசிகர்களாக மாறிவிட்டனர்" என்று வினீத் ஸ்ரீனிவாசன் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.