பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி - உடல்நலம் கவலைக்கிடம் என தகவல்
பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மாரடைப்பு காரணமாக அங்கமாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
மலையாளத்தில் ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஸ்ரீநிவாசன். தமிழில் ஷாம் நடிப்பில் வெளியான லேசா லேசா படத்தில் காமெடி வேடத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்திருப்பார். 1970 ஆம் ஆண்டு தொடங்கிய இவரது நடிப்புப் பயணம் மலையாளத்தில் தொடர்ந்து வருகிறது.
இதனிடையே கடந்த மார்ச் 30 ஆம் தேதி இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து இவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால் ஸ்ரீநிவாசனின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் அவரது உடல்நிலை தேற ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.