பிரபல நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார் - அதிர்ச்சியில் திரையுலகம்
பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்.
ஸ்ரீனிவாசன் மறைவு
பிரபல மலையாள நடிகர், திரைக்கதையாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ஸ்ரீனிவாசன் (69) கொச்சியில் காலமானார். இவர், சமூக விமர்சனங்கள் கலந்த நகைச்சுவை படங்களுக்கு பெயர் பெற்றவர்.

சந்தோசம், நாடோடிக்காட்டு போன்ற பல கிளாசிக் படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். தமிழில் புள்ளக்குட்டிக்காரன், லேசா லேசா போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
மோகன்லால், மம்முட்டி, திலீப் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 225-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஒரு தேசிய விருது, இரண்டு ஃபிலிம்பேர் விருதுகள் மற்றும் 6 முறை கேரள அரசு விருதுகளை வென்றுள்ளார். உடல் நல பிரச்னையால் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சையில் இருந்து வந்த ஸ்ரீனிவாசன் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.