புற்றுநோய் பாதிப்பால் பிரபல நகைச்சுவை நடிகர் மரணம் - ரசிகர்கள் கண்ணீர்
மலையாள நகைச்சுவை நடிகர் இன்னசென்ட் புற்று நோய் பாதிப்பால் நேற்று காலமானார்.
நடிப்புகளில் திறமை
மலையாள சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராகத் திகழ்ந்தவர் இன்னசென்ட் வயது 75, மலையாளம் , தமிழ் ,கன்னடம் ,இந்தி என நான்கு மொழிகளில் 700 மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் .
பாடகர் ,தயாரிப்பாளர் என தனது பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார் , இவரது நடிப்பை பாராட்டும் விதமாக மூன்று முறை கேரளா அரசு விருது வழங்கியுள்ளது.
புற்று நோயினால் காலமானார்
இந்நிலையில் நடிகர் இன்னசென்ட் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் அனுமதிக்கப்பட்டார்.
மார்ச் மாத தொடக்கத்திலிருந்து உடல் நிலை மோசமடைந்தது, நுரையீரல் தொடர்பான நோய்களுடன் உறுப்புகள் செயலிழந்தது.
இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டர். இதையடுத்து புற்றுநோய் தீவிரமடைந்த நிலையில் நேற்று இரவு உயிர் இழந்தார் .
இவரது மறைவுக்கு கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபல நடிகர்கள் என இந்திய சினிமா உலகமே இரங்கல் தெரிவித்து வருகிறது.
நடிகர் இன்னசென்ட் 2012 ஆம் ஆண்டு புற்று நோயால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்துள்ளார். அது குறித்த தனது அனுபவத்தை ஒரு புத்தகமாக எழுதியுள்ளார். இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.