படப்பிடிப்பில் நடிகை மாளவிகா மோகனனுக்கு ஏற்பட்ட காயம் - ரசிகர்கள் அதிர்ச்சி

Malavika Mohanan accident in shooting
By Anupriyamkumaresan Nov 28, 2021 01:17 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

பேட்ட படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன் தெலுங்கில் வெளியான சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

இந்த ஆண்டு வெளியான மாஸ்டர் படத்தின் மூலமாக தான், கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். மேலூம் தற்போது ரஜினி, விஜய்யை தொடர்ந்து தனுஷுடன், மாறன் படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார்.

அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் நடிகை மாளவிகா மோகனன் தற்போது அதிர்ச்சியளிக்கும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஆம், படப்பிடிப்பின் போது தனக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது என்று புகைப்படத்தை ஷாக்கிங் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.