நடுக்காட்டில் 6 புலிகள்... 3 சிறுத்தைகள்... நடுவே அசால்ட்டா க்ளிக் செய்த மாளவிகா - ரசிகர்கள் ஷாக்

Malavika Viral Video
By Nandhini Jun 02, 2022 09:49 AM GMT
Report

கடந்த 2013ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் சினிமா திரையுலகில் அறிமுகமானவர்தான் நடிகை மாளவிகா மோகனன். இவர் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘பேட்ட’ படம் மூலம் அறிமுகமானார்.

இதன் பின்பு, நடிகர் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான ‘மாறன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். 

மாளவிகா மோகனன், அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

தற்போது சமூகவலைத்தளங்களில் நடிகை மாளவிகா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோவில், கடந்த 3 நாட்களில் 6 புலிகள், 3 சிறுத்தைகளை கண்ட அவர், அவற்றை தனது கேமராவில் தத்ரூபமாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். . அதுமட்டுமின்றி, ஆபத்தான அந்த மிருகங்களை அருகில் இருந்து போட்டோக்களை எடுத்துள்ளார். மரத்தின் கிளையில் உறங்கிக் கொண்டிருக்கும் சிறுத்தையை தத்ரூபமாக அவர் கேமராவில் க்ளிக் செய்த வீடியோ தற்போது சமூகவத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்த பயங்கரமாக திகிலூட்டும் காட்சிகளைப் பார்த்த அவரது ரசிகர்கள் ஷாக்காகி கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த பதிவிற்கு நடிகை சமந்தா உள்ளிட்ட பிரபல நடிகைகள் லைக் போட்டிருக்கிறார்கள்.