“ஓ...மாலு டார்லிங்” - மொத்த அழகையும் காட்டும் நீல நிற உடையில் மாளவிகா மோகனன்

malavikamohanan மாளவிகாமோகனன்
By Petchi Avudaiappan Jan 31, 2022 10:21 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

மாலத்தீவில் மாளவிகா என ஒரு பக்கமே திறக்கும் அளவுக்கு நடிகை மாளவிகா மோகனன் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. 

கடந்த 2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான மாளவிகா மோகனன், தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார்.

அதன்பின் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் ‘மாறன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். 

இதனிடையே  விடுமுறையை கொண்டாட மாலத்தீவுக்கு சென்றுள்ள மாளவிகா நீச்சல் உடையில் மிக கவர்ச்சியாக எடுத்துள்ள புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அடுத்ததாக கடல் நீல மோனோகினியில் மொத்த அழகையும் காட்டி, செதுக்கி வைத்த சிலை போல் நின்று போஸ் கொடுத்த 3 போட்டோக்களை வெளியிட்டுள்ளார். 

இதை பார்த்து வர்ணிக்க வார்த்தைகளோ இல்லாமல் ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர். இவரது இந்த போட்டோ தான் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.