சிலிர்க்க வைக்கும் மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் - இணையத்தில் வைரல்
நடிகை மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான மாளவிகா மோகனன், தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார். அதன்பின் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் ‘மாறன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது, மாடர்ன் உடையில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி உள்ள அவர் அதன் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் பல லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.