நீச்சல் உடையில் கவர்ச்சியை அள்ளித் தெளிக்கும் மாளவிகா மோகனன் - இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

vijay dhanush maaran malavikamohanan மாளவிகாமோகனன்
By Petchi Avudaiappan Jan 29, 2022 05:40 PM GMT
Report

மாலத்தீவில் நடிகை மாளவிகா மோகனன் நீச்சல் உடையில் எடுத்த புகைப்படங்களும்,வீடியோக்களும் இணையத்தில் வைரலாகியுள்ளன. 

கடந்த 2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான மாளவிகா மோகனன், தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார்.

அதன்பின் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் ‘மாறன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். 

இந்நிலையில் விடுமுறையை கொண்டாட மாலத்தீவுக்கு சென்றுள்ள மாளவிகா நீச்சல் உடையில் மிக கவர்ச்சியாக எடுத்துள்ள புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டுள்ளார். கடல் அருகே ஒட்டியபடி அமைந்திருக்கும் நீச்சல் குளத்தில் மல்லாக்க படுத்து நீச்சல் அடித்தபடி தற்போது மாளவிகா மோகனன் பிகினி உடையில் போட்டோ, வீடியோ இரண்டையும் பதிவிட்டுள்ளார்.