கவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட மாளவிகா மோகனுக்கு நேர்ந்த கதி - அதிர்ச்சியில் ரசிகர்கள்

malavikamohanan மாளவிகா மோகனன்
By Petchi Avudaiappan Feb 02, 2022 04:08 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

நடிகை மாளவிகா மோகனனின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்ததாக ஊடகங்களில் வெளியான செய்தியைக் கண்டு ஆத்திரமடைந்துள்ளார். 

கடந்த 2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான மாளவிகா மோகனன், தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார். அதன்பின் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் ‘மாறன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

இதனிடையே விடுமுறையை கொண்டாட மாலத்தீவுக்கு சென்றுள்ள மாளவிகா நீச்சல் உடையில் மிக கவர்ச்சியாக எடுத்துள்ள புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். இவரது இந்த பதிவுகள் இணையத்தில் பேசுபொருளாக மாறிய நிலையில் இன்று நடிகை மாளவிகா மோகனின் மோசமான கவர்ச்சியில் இருப்பதாக புகைப்படம் இணையத்தில் வெளியானது.

அதாவது கடந்த வருடம் நவம்பர் மாதம் அவர் பதிவிட்ட புகைப்படத்தை படுகவர்ச்சியாக மார்பிங் செய்து சமூகவலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாளவிகா மோகனன் தன்னைப் பற்றி அவதூறாக செய்தி வெளியிட்ட ஊடகத்தையும் டேக் செய்து ஒரு புகைப்படம் வெளியானால் அந்த புகைப்படத்தின் உண்மை தன்மை பற்றி அறிய வேண்டியது ஊடகங்களே, ஆனால் அவர்களே அதைப்பற்றி அறியாமல் தங்களது இணையதள பக்கங்களில் மோசமாக செய்தி வெளியிடலாமா.? என கேள்வி எழுப்பியுள்ளார்.