மகளிர் தினத்தை உற்சாகமாக கொண்டாடிய மாளவிகா மோகனன் - அதுவும் யாருடன் தெரியுமா?
தமிழில் நடிகர் விஜய் ஜோடியாக மாஸ்டர் திரைபடத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.
இவர் அடுத்ததாக நடிகர் தனுஷுடன் மாறன் படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், மகளிரைப் போற்றும் வகையில் மார்ச் 8-ஆன நேற்று முந்தினம் சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
அந்த வகையில் மாறன் பட புரமோஷன் வேளைகளுக்காக சென்னை வந்துள்ள நடிகை மாளவிகா மோகனன் ஆதரவற்ற பெண் குழந்தைகளுடன் மகளிர் தினத்தை சந்தோஷமாக கொண்டாடியுள்ளார்.
அந்த குழந்தைகளுடன் கேக் வெட்டியும், மதிய உணவு அருந்தியும் ‘மாஸ்டர்’படத்தில் தான் பேசிய சில வசனங்களைச் சொல்லியும் அவர்களை மகிழ்வித்து
தனது மகளிர் தினத்தை மாளவிகா மோகனன் உற்சாகமாகக் கொண்டாடியுள்ளார்.
“மகளிர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது! இன்று இந்தச் சிறியவர்களுடன் என் நேரத்தையும், எனக்குப் பிடித்த உணவையும் பகிர்ந்து கொள்ள நினைத்தேன்.
நாங்கள் கேக் வெட்டி, பிரியாணி சாப்பிட்டோம், அவர்கள் என்னை 'மாஸ்டர்' படத்தின் இரண்டு டயலாக்குகளைச் சொல்ல வைத்தார்கள்.
ஒவ்வொரு முறையும் அவர்களைப் பார்க்கச் சென்னைக்கு வரச் சொன்னார்கள்." என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் இந்த தகவலை மாளவிகா பகிர்ந்துள்ளார்.