எதுக்கு இவ்ளோ Glamour photos - ரசிகரின் கேள்வி !! நேரலையில் மாளவிகா நச் பதில்

Malavika Mohanan Tamil Cinema Tamil Actress
By Karthick Apr 29, 2024 04:15 PM GMT
Report

ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.

மாளவிகா மோகனன்

நடிகை மாளவிகா மோகனன் தற்போது தமிழின் முன்னணி நடிகையாக முன்னேறி வருகிறார். பேட்ட படத்தில் பூங்கொடியாக அறிமுகமான மாளவிகா மாஸ்டர் படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

malavika mohanan in saree

தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பிடிப்பதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார் மாளவிகா.தெலுங்கில் நடிகர் பிரபாஸ் நடித்து வரும் "ராஜா சாப்" படத்தில் மாளவிகா தற்போது நாயகியாக நடித்து வருகின்றார்.

திருமண ஏற்பாடுகளா..? ரசிகர்களை ஏமாற்றிய மாளவிகா மோகனன்

திருமண ஏற்பாடுகளா..? ரசிகர்களை ஏமாற்றிய மாளவிகா மோகனன்

என் போட்டோ இப்படி 

இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அடிக்கடி எக்ஸ் தளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடி வருவதை மாளவிகா மோகனன் வழக்கமாக வைத்துள்ளார். அப்படி தான் இன்று அவர், #AskMalavika என்ற பெயரில் கலந்துரையாடல் நடத்தினர்.

அதில் ரசிகர் ஒருவர், நீங்கள் ஏன் அதிகம் கிளாமரான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறீர்கள் என்று மாளவிகா மோகனனிடம் கேள்வி கேட்டார் . அதற்கு அவர், "ஏன் என்றால் எனக்கு அது பிடிக்கும்" என்று சிம்பிளாக பதில் அளித்துள்ளார். மாளவிகா மோகனன் அதில் பதில் பதிவு இதோ