மலரே நின்னே காணாதிருந்தால்.. பிரேமம் 6 வருடம்..
ஒரு சினிமா, மொழிகளைக் கடந்து எல்லோரையும் இழுக்கும் மேஜிக்.. அப்படி பிரேமம் எனும் மேஜிக் வெளியாகி இன்றோடு 29.5.2021 6 ஆண்டுகள் ஆன நிலையில், மலையாள ரசிகர்களை கடந்து தமிழ் மக்கள் அதிகம் கொண்டாடியதன் காரணம் என்ன? வாருங்கள் காண்போம் இந்த தொகுப்பில்.
கொஞ்சம் தமிழ் சினிமா வரலாற்றை திரும்பி பார்த்தால், கேரளாவோடு தொடர்பு இருப்பது போன்று எடுக்கப்பட்ட படங்கள்,
அந்த 7 நாட்கள்', ஆட்டோகிராஃப்', 'விண்ணைத்தாண்டி வருவாயா'... போன்ற படங்கள் அந்த வரிசையில் இடம்பெற்ற பிரேமம், மிகவும் அழகானது.
மூன்று பெண்களால் George-இன் வாழ்க்கையில் இன்பம், துன்பம் என மாற்றங்கள் ஏற்படுவதை, கொஞ்சம் ஆட்டோகிராஃப், கொஞ்சம் அட்டகத்தி என,கலந்திருக்கும் காதல் காவியம் .
காதலை ஒரு விதமான பரவசத்துடன் படம் முழுவதும் காண்பித்திருப்பார் அல்போன்ஸ் புத்திரன்.
பிரேமத்தில் காட்டப்பட்ட காதல்களில், பெரும்பான்மையான மக்களால் விரும்பப்பட்டது 'மலர்-ஜோர்ஜ்' காதலே. ஒங்க பேர் என்ன சொன்னீங்கன்னு மலர் கேட்டதுமே ஜார்ஜ் வெட்கபடுவதும்... செலின் தான் யாரென்று அறிமுகப்படுத்துவது... படம் முடியும் போது மலரும் அறிவழகனும், ஜார்ஜை பற்றி பேசிக்கொள்வது என அவ்வளவு அழகு..
பிறகு ..கேரளாவில் பிறந்து வளர்ந்த தமிழரான ராஜேஷ் முருகேசனின் கிறங்கடிக்கும் இசையும், ஒரு வித மயக்கத்திலேயே நம்மை வைத்திருக்கும்.
படத்தின் இறுதி காட்சியில் மலர் டீச்சரின் கணவன் கேட்கும் ஒற்றை வார்த்தைக் கேள்விக்கு மலர் தரும் ஒரு வரி பதில்தான் க்ளாசிக்.
ஒரு நல்ல நாவலில் கடைசி ஒரு அத்தியாயம் காணாமல் போயிருந்தால் இருக்குமே, அது போன்றதொரு வெறுமையினை படத்தின் இறுதி காட்சி கொடுக்கும் .
அப்படி இருந்ததால் தான் 6 ஆண்டுகள் ஆனாலும் தமிழ் வண்டுகள் மலரே நின்னே காணாதிருந்தால் என இன்னமும் மலர் டீச்சரை சுற்றிச்சுற்றி வருகின்றனர் .
சுருக்கமாக சொன்னால் "Butterfly is mentally mental, so is love" - இதுதான் ப்ரேமம் .