'' இந்திய தலைவர்கள் பெண்களை ஒடுக்குவதை நிறுத்த வேண்டும்.” - ஹிஜாப் விவகாரம் குறித்து மலாலா கண்டனம்.

karnataka malala hijab
By Irumporai Feb 09, 2022 06:35 AM GMT
Report

இஸ்லாமிய பெண்களை ஹிஜாப் அணிந்து பள்ளிக்குச் செல்ல அனுமதி மறுப்பது கொடுமையானது எனவும் இஸ்லாமியப் பெண்களை ஒடுக்குவதை நிறுத்த வேண்டும். என பெண் உரிமைப் போராளி மலாலா கணடனம் தெரிவித்துள்ளார் .

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரம் இந்திய அளவில் பேசு பொருளானது இந்த நிலையில்கர்நாடகாவில் ஹிஜாப் - காவித்துண்டு பிரச்சனை தொடர்பான மாணவர்கள் போராட்டம் கலவரமாக மாறியது.

பல இடங்களில் காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டு வீசியும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைத்தனர். கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணிடம், காவித்துண்டு அணிந்து வந்த மாணவர்கள் ‘ஜெய் ஸ்ரீராம் ‘ என கோஷமிட்டனர்.

பதிலுக்கு அந்த மாணவியும் ‘அல்லாஹூ அக்பர்’ என முழக்கமிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற, பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் உரிமைப்போராளியுமான மலாலா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மலாலா தனது ட்விட்டர் பதிவில், . பெண்களை ஹிஜாப் அணிந்து பள்ளிக்குச் செல்ல அனுமதி மறுப்பது கொடுமையானது. பெண்களின் ஆடை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அணிந்தால் அவர்களை புறந்தள்ளுவது தொடர்வது வேதனை அளிக்கிறது.

இந்தியத் தலைவர்கள் இஸ்லாமியப் பெண்களை ஒடுக்குவதை நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.