தன்னை விட 13 வயது சிறிய காதலனுடன் டேட்டிங் சென்ற பிரபல நடிகை
பிரபல இந்தி நடிகை மலைக்கா அரோரா தன்னை விட 13 வயது சிறிய காதலனுடன் டின்னர் டேட்டிங் போன புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை, டான்சர், மாடல், டிவி தொகுப்பாளினி என பல முகங்களை கொண்ட பாலிவுட்டின் படு கவர்ச்சியான நடிகைகளில் ஒருவர் மலைக்கா அரோரா தமிழில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான உயிரே படத்தில் தக்க தைய்ய தைய்யா என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார்.
இவர் நடிகர் சல்மான்கானின் சகோதரரும் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவருமான அர்பாஸ் கானை காதலித்து 1998 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அர்ஹான் கான் என்ற 17 வயது மகன் உள்ளார்.
இதனிடையே கடந்த 2017 ஆம் ஆண்டு மலைக்கா அரோராவும் அர்பாஸ் கானும் சட்டப்படி விவாகரத்து செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மலைக்கா அரோரா போனி கபூரின் முதல் மனைவியின் மகன் அர்ஜுன் கபூருடன் காதல் உறவில் உள்ளார் என்பது ஊரறிந்த விஷயமாகும்.
மலைக்கா அரோராவுக்கு 46 வயதாகும் நிலையில், அர்ஜுன் கபூருக்கு 33 வயதுதான் ஆகிறது. 13 வயது சிறியவரான அர்ஜுன் கபூரை அவர் காதலித்து வருவது தான் இதில் பரபரப்பு தொற்றிக்கொள்ள காரணம் ஆகும்.
இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்ற தகவல் நீண்ட காலமாக பரவி வரும் நிலையில், சமீபத்தில் இரவு டின்னர் டேட்டிங் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.