பன்னீர் வைத்து வெறும் 10 நிமிடங்களில் குழந்தைகளுக்கு பிடித்த ஹெல்த்தி ஸ்நாக் ரெசிபி 

Healthy Food Recipes Malaika Arora
By Sakthi Raj Jun 05, 2026 05:31 AM GMT
Report

சைவ உணவு பிரியர்களுக்கு பன்னீர் எப்பொழுதும் மிகவும் பிடித்த உணவாக இருக்கிறது. அந்த பன்னீரை கொண்டு பிரியாணி, பன்னீர் பட்டர் மசாலா என்று பல சுவையான உணவுகளை நாம் தயாரிக்கலாம்.

அந்த வகையில், சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவக்கூடிய பிரபலமான உணவு ரெசிபிகளில் ஒன்றாகவும் பாலிவுட் நட்சத்திரம் மலாக்கா அரோராவின் 'பன்னீர் தேச்சா' ரெசிபி தற்பொழுது இணையதளங்களில் ட்ரெண்டாக பரவி வருகிறது. மகாராஷ்டிராவில் பாரம்பரியம் மற்றும் காரசாரமான உணவாக இருக்கக்கூடிய இந்த ஸ்நேக் வகையை நாம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

பன்னீர் வைத்து வெறும் 10 நிமிடங்களில் குழந்தைகளுக்கு பிடித்த ஹெல்த்தி ஸ்நாக் ரெசிபி  | Malaika Arora Thecha Paneer Easy Recipe For Kids

இந்த பன்னீர் தேச்சா மிகவும் வித்தியாசமான மற்றும் புதுமையான ரெசிபியாக இருக்கிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த உணவு மிகவும் பிடித்தமானதாக இருப்பதோடு மட்டுமின்றி நம்முடைய உடலுக்கு தேவையான புற சத்துக்கள் நிறைந்த ஒரு ஹெல்த்தியான ஸ்னாக்ஸ் ஆகவும் உள்ளது. காரசாரமாக சாப்பிட விரும்பும் நபர்கள் இந்த உணவை நிச்சயம் தேர்ந்தெடுத்து சாப்பிடலாம்.

அதோடு வெறும் 10 முதல் 15 நிமிடங்களில் நாம் எளிமையாக சமைத்து விடலாம். அப்படியாக, இப்பொழுது இந்த பன்னீர் தேச்சா செய்வதற்கு நமக்கு பன்னீர், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், பூண்டு, வறுத்த வேர்க்கடலை சீரகம், கொத்தமல்லி தழை, எண்ணெய் உப்பு ஆகியவை தேவைப்படுகிறது.

பிறகு ஒரு கடாயில் 6 பச்ச மிளகாய், 10 பல் பூண்டு மற்றும் சீரகத்தை எண்ணெயில்லாமல் முதலில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும், பிறகு கடாயில் வருத்த வேர்க்கடலை ஒரு கை கொத்தமல்லி, பாதி எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு நமக்கு தேவையான அளவில் பன்னீரை துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும். அதில் இந்த மிக்ஸை சமமாக தடவி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு கடாயில் கொஞ்சமாக எண்ணெய் அல்லது நெய் ஊற்றி பன்னீர் துண்டுகளை அதில் சேர்க்கவும். மிதமான தீயில் இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் மட்டும் பன்னீரை நன்றாக வதக்கி பிறகு இறக்கி விட வேண்டும்.

பன்னீர் வைத்து வெறும் 10 நிமிடங்களில் குழந்தைகளுக்கு பிடித்த ஹெல்த்தி ஸ்நாக் ரெசிபி  | Malaika Arora Thecha Paneer Easy Recipe For Kids

அதிகம் வதக்கினால் பன்னீர் ரப்பர் போல் கடினமாக ஆகிவிடும். பின்பு சாப்பிடுவதற்கு அவ்வளவு உகந்ததாக இருக்காது. குறிப்பாக எல்லா பக்கமும் சரியாக வருக்கப்பட்டு இருக்க வேண்டும். பிறகு தயார் செய்த இந்த பன்னீர் ரெசிபியை நாம் சப்பாத்திக்கு அல்லது மதிய உணவான தயிர் சாதம் போன்றவற்றுக்கு மிகச் சிறந்த சைட் டிஷ்ஷாக இருக்கும்.

அல்லது சப்பாத்தியின் உள்ளே பன்னீரை வைத்து வெங்காயம் தூவி சுருட்டி பன்னீர் ரோல் ஆகவும் குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்கள் ஆவலோடு சாப்பிடுவார்கள். இந்த ரெசிபியை உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பட்டியல் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

வெறும் பத்து நிமிடங்களில் தயார் செய்யக்கூடிய உணவு வகை என்பதால் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான உணவாகவும் இது மாறி வருகிறது.