50 வயது காதலி; 12 வயது இளையவராக பிரபல நடிகர் - அந்தரங்க புகைப்படத்தால் சர்ச்சை
நடிகை மலாய்கா அரோரா இன்ஸ்டா ஸ்டோரி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பாலிவுட் ஜோடி
பாலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளில் ஒன்றாக வலம் வருபவர்கள் மலாய்கா அரோரா - அர்ஜுன் கபூர் ஜோடி. 12 வயது வித்தியாசத்தில் இருவரும் காதலித்து வருவதால் தொடக்கம் முதலே சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை.
இந்நிலையில், அர்ஜுன் கபூர் சோபாவில் படுத்திருக்கும் படத்தை மலாய்கா தன்னுடைய சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். அதற்கு 'என் சோம்பேறி குழந்தை' என்று தலைப்பிட்டுள்ளார்.
சர்ச்சை
இந்த பதிவுக்கு சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் பலர் கண்டனங்களை பதிவிட்டுள்ளனர். முன்னதாக, 19 வருட திருமணத்திற்குப் பிறகு 2017ல் மலைக்கா அரோராவும் அர்பாஸ் கானும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு அர்ஹான் என்ற 16 வயது மகன் உள்ளார்.
மலைக்கா அரோரா அர்ஜுன் கபூருடன் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ரிலேஷன்ஷிப்பில் உள்ளார். 2019ஆம் ஆண்டு அர்ஜுனின் பிறந்தநாளில் இருவரும் தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.