கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை - தனியார் மருத்துவமனையில் அனுமதி!

Accident Actor Car Injured MalaikaArora
By Thahir Apr 03, 2022 04:53 AM GMT
Report

பிரபல நடிகை பயணம் செய்த கார் மற்ற இரண்டு கார்களின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் நடிகைக்கு லேசான காயம் ஏற்பட்டது.

மகாராஷ்டிரா மாநிலம்,பன்வெல் பகுதியில் பிரபல இந்தி நடிகையான மலாய்கா அரோரா சென்ற ரேஞ்ச் ரோவர் சொகுசு கார் விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில்,ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார்,விரைவுச்சாலையில் சென்ற 2 கார்களின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் நடிகை மலாய்கா அரோராவுக்கு நெற்றி மற்றும் கண்களில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ள நிலையில்,

அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.