ஆ.ராசாவுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம்? வைரலாகும் அறிக்கையின் உண்மை பின்னணி

kamal dmk mnm rasa
By Jon Mar 29, 2021 03:27 PM GMT
Report

முதல்வர் குறித் ஆ.ராசாவின் பேச்சு சர்ச்சையான நிலையில், அவருக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவரான மகேந்திரன் அறிக்கை வெளியிட்டதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் பரவியது, தற்போது அது பொய்யான ஒன்று என தெரியவந்துள்ளது. ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமியை ஒப்பிட்டு பேசும் போது, ஆ.ராசா கூறிய உதாரணம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு தற்போது வருத்தம் தெரிவித்து ஆ.ராசா விளக்கம் கொடுத்துள்ளார். இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவரான மகேந்திரன், ஆ.ராசாவுக்கு ஆதரவு தெரிவித்ததாக அறிக்கையொன்று பரவி வந்தது.

அதில், சில நாட்களுக்கு முன் திமுகவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் ஆ.ராசா தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிறப்பு குறித்து கருத்து கூறியது கருத்துச் சுதந்திரத்துக்கு உட்பட்டது.

ஆகவே, கருத்துச் சுதந்திரத்தை எதிர்க்கும் அதிகாரத்தில் இருப்பவர்களைக் கண்டித்து திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசாவுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் என்றும் துணை நிற்கும் என நிறுவனத் தலைவர் கமல்ஹாசன் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதே சமயம் ஆ.ராசாவைக் கண்டித்து தேர்தல் நேரத்தில் அதிமுக அதன் கூட்டணிக் கட்சிகள் மற்றும் சமுதாயச் சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு தற்போது மறுப்பு தெரிவித்துள்ள மகேந்திரன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில், சில சமூக விரோதிகளால் ஊடகங்களில் பரவும் இந்தச் சுற்றறிக்கை தவறானது! அருவருக்கத்தக்க இச்செயலை செய்தவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.