மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பொன்ராஜ்

dmk NTK aiadmk
By Jon Mar 03, 2021 03:34 PM GMT
Report

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் உதவியாளர் பொன்ராஜ் இணைந்தார். அதன்பின்னர் அவர் பேசுகையில், அப்துல் கலாமின் அறிவார்ந்த அரசியல் காலத்தின் கட்டாயம், அவர் கனவை நனவாக்க தொடர்ந்து உழைப்பேன்.

அவரது பெயரில் தொடங்கிய கட்சியை பதிவு செய்ய விடாமல் பாஜக தடுத்து விட்டது, வல்லரசு இந்தியா என்ற கலாமின் கனவை நனவாக்க மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன என தெரிவித்துள்ளார்.

மேலும் 5.7 லட்சம் கோடி கடன் என்ற நிலையை விரைவில் மாற்றுவோம் என்றும், வருகிற சட்டமன்ற தேர்தலில் 120 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் நிச்சயம் வெற்றி பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.