''10 ஆண்டுகளில் செய்யாதை 100 நாட்களில் செய்து முடிப்பேன்'' -கமல்ஹாசன் பேச்சு
10 ஆண்டுகளில் செய்யாததை 100 நாட்களில் செய்து முடிப்பேன் என்று கோவையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவை தெற்கு தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் கமல்ஹாசன் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தில் பேசிய கமல்ஹாசன், எனது தொகுதியில் குடியிருக்க வீடு தான் வேண்டும்.
அதை வாடகைக்கும் எடுத்துக்கொள்ளலாம் அல்லது விலைக்கு வாங்கிக்கொள்ளலாம். ஆனால், நான் எப்போழுதும் இருக்கும் இடம் உங்கள் மனமாக இருக்க வேண்டும் என கூறினார். மேலும், குடிநீரும், சாக்கடையும் கலந்துள்ளது எவ்வளவு பெரிய விஷம். அந்த விஷத்தை பரவவிட்டுவிட்டு வேடிக்கை பார்ப்பவர்கள் நீக்க வேண்டும் என கூறிய கமல்ஹாசன்.

கோவையினை மாற்ற ,பிரதமர் தேவையில்லை ஒரு எம்.எல்.ஏ. போதும். இந்தியாவின் தொழில்நகரமாக இருந்த கோவை தற்போது வெறும் நகரமாக உள்ளது 10 ஆண்டுகளில் செய்யாததை 100 நாட்களில் செய்து முடிப்பேன் என கமல்ஹாசன் கூறினார்.