மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இருந்து மேலும் ஒரு கட்சி விலகல்
kamal
party
mnm
dissent
By Jon
மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இருந்து மேலும் ஒரு கட்சி விலகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ள நிலையில்,பல்வேறு காட்சிகள் மாநிலத்தின் முக்கிய கட்சிகளோடு கூட்டணியும் சில காட்சிகள் தனித்தும் போட்டியிடுகின்றன. அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் பல காட்சிகள் இணைந்தன.
இந்த நிலையில் தற்போது மக்கள் நீதி மய்யம் கூட்டணியிலிருந்து விலகுவதாக தமிழ்நாடு இளைஞர் கட்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், உடன்பாடு எட்டப்படாததால் கூட்டணியில் இருந்து விலகியது.