மக்கள் நீதி மய்யத்திற்கு செக் வைக்க முயற்சிக்கும் பாஜக- முறியடிப்பாரா கமல்?
திமுக, அதிமுகவுக்கு எதிராக 3ஆவது அணியாக களத்தில் இறங்கி இருக்கிறது மக்கள் நீதி மய்யம். பாஜகவை விட மக்கள் நீதி மய்யத்துக்கு தற்போது மவுசு அதிகரித்திருக்கிறது. இதனால் மக்கள் நீதி மய்யத்துக்கு செக் வைக்கும் அனைத்து முயற்சிகளில் தற்போது பாஜக செயல்பட்டு வருகிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கமல்ஹாசன் பெரும்பாலும் திமுகவை தான் விமர்சிப்பார். பாஜகவை அவர் விமர்சிப்பது சற்று குறைவு தான். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுக, பாஜகவை குறி வைத்து பேசிய அவர் இந்த முறை திமுக, அதிமுகவை மட்டும் விமர்சிப்பது ஏன் என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது.
சூரப்பாவுக்கு எதிரான அரசின் நடவடிக்கைக்கு குரல் கொடுத்த கமல்ஹாசனை, பாஜகவின் பி டீம் என விமர்சிக்க தொடங்கி விட்டார்கள் சிலர். அப்போதில் இருந்தே அந்த புனைப்பெயர் அவரை தொற்றிக் கொண்டது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனுக்கு எதிராக பாஜக ஒவ்வொரு கிராமமாக சென்று அவர் பி டீம் என பிரச்சாரம் செய்து வருவதாக கூறப்படுகிறது. தொகுதி பங்கீடு, கூட்டணி உள்ளிட்ட கட்சி பணிகளில் கமல்ஹாசன் பிஸியாக இருப்பதால், பாஜகவின் இந்த மூவ் கமலை அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது.