மக்கள் நீதி மையத்தின் பொதுக்கூட்டத்தில் அரங்கேறிய அவல நிலை
மக்கள் நீதி மையத்தின் பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்தவர்கள் பொது கூட்டத்தை கவனிக்காமல் செல்போன் பயன்படுத்திய புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4 ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. நான்காவது ஆண்டு துவக்க விழாவை கொண்டாடும் வகையிலும், நமது மகத்தான தேர்தல் வெற்றிக்கு கட்டியம் கூறும் வகையிலும் பிரம்மாண்டமான மாநாடு நடைபெறுவதாக கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.
மேலும் இந்த மகத்தான பயணத்தில் எதுவும் நமக்குத் தடை அல்ல; நாம் ஒருபோதும் துவளும் தடையல்ல என்பதை தமிழகத்திற்கு உணர்த்த மக்கள் நீதி மய்யத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் இந்த மாநாட்டிற்கு அணிதிரள வேண்டும் என அறிக்கையின் வாயிலாக கேட்டுக்கொண்டார். ஆனால் சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4ம் ஆண்டு தொடக்க விழாவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு தொண்டர்கள் வராததால் கமல் அதிருப்தி அடைந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
8000 பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 3000 பேர் கூட வராததால் கமல்ஹாசன் ஏமாற்றமடைந்தார். அதுமட்டுமின்றி வந்தவர்களும் கமல்ஹாசனின் கூட்டத்தை முறையாக கவனிக்காமல் செல்போன் பார்த்துக்கொண்டும், தூங்கிக்கொண்டும் இருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.