சென்னையில் மக்கள் நீதி மய்யம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.. வெளியான சர்வே.!
டைம்ஸ் நவ் இந்தியா நடத்திய தேர்தல் சர்வேயில் சென்னை பகுதியில் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டைம்ஸ் நவ் ஆங்கில ஊடகம் சிவோர்ட்டர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தமிழகம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும்.
யாருக்கும் எத்தனை இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதை கணித்து வெளியிட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, திமுக கூட்டணி 177 இடங்களை பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது. அதேநேரம் அதிமுக கூட்டணி 49 இடங்களில் வெல்லும் வாய்ப்பு உள்ளதாகவும், மக்கள் நீதி மய்யம் 3 இடங்களிலும், அமமுக 3 இடங்களிலும் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் கூறி உள்ளது.

மேலும் மண்டல வாரியாக எந்தெந்த கட்சிகள் எவ்வளவு வாக்குகள் பெரும் எனவும் தெரிவித்துள்ளது. அதன்படிதிமுக கூட்டணி இந்த முறை 44 சதவீதம் வாக்குகள் பெறும் என்று கணித்துள்ளது.
அதேநேரம் அதிமுக கூட்டணி 32.8 சதவீதம் வாக்குகள் பெறும் என்றும் கணித்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக மக்கள் நீதி மய்யம் 20.5 சதவீத வாக்குகளை பெரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.