மாரத்தான் ஓட்டம் மூலம் வாக்கு சேகரித்த மக்கள் நீதி மய்ய வேட்பாளர்
மதுரையில் வித்தியாசமான முறையில் 16 கிமீ மாரத்தான் ஓட்டம் மூலம் ஓட்டு சேகரித்த மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர். தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இதனையொட்டி மக்கள் நீதி மய்யம் மதுரை மேற்கு சட்டமன்ற வேட்பாளர் முனியசாமி அவர்கள் தலைமையில் சோலை அழகுபுரம் மெயின் ரோட்டில் இருந்து பழங்காநத்தம் பைபபாஸ் வழியாக பரவை வரை மராத்தான் பந்தயம் நடைபெற்றது.

16 கிமீ தூரம் மக்கள் நீதி மய்யம் இளைஞர்களோடு நாம் "சீரமைப்போம் தமிழகத்தை" என்ற கோசதத்துடன் டார்ச் லைட் ஏந்தி மாரத்தான் ஓட்டம் மூலம் மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் V.முனியசாமி அவர்கள் டார்ச் லைட் சின்னத்தில் வாக்களிக்கும் படி சாலைகளில் மாரத்தான் ஓட்டம் மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வழி நெடுகிலும் பொதுமக்கள் மகிழ்ச்சி பொங்க வரவேற்பு அளித்தனர் இந்நிகழ்வில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்