மாகபா ஆனந்திற்கு இவ்வளவு பெரிய மகளா? - ஆச்சரியப்படும் ரசிகர்கள்

makapaanand மாகபாஆனந்த்
By Petchi Avudaiappan Sep 21, 2021 10:15 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

பிரபலமான தொலைக்காட்சி தொகுப்பாளரான மா.க.பா ஆனந்தின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவரான மா.க.பா.ஆனந்த், சினிமா, யூடியூப் சேனல் என எந்நேரமும் பிசியாகவே சுழன்று வருகிறார். சூப்பர் சிங்கர் போட்டியாளர்கள் முதல் நடுவர்கள் வரை என அனைவரையும் கலாய்த்து, குதூகலமாக ஷோவை எடுத்துச் செல்வதில் மாகபாவிற்கு நிகர் அவரே என்பது போல் அவர்  தொகுத்து வழங்குவது அனைவரையும் எளிதில் கவர்ந்து விடும். 

ஊர் சுற்றுவதிலும், கிரிக்கெட் விளையாடுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர் அதன் வீடியோக்களை தனது யூட்யூப் பக்கத்தில் பதிவேற்றி மில்லியன் பார்வைகளை பெற்று விடுகிறார். இதனால் அவர் சார்ந்த எந்த விஷயமாக இருந்தாலும் சமூகவலைதளங்களில் வைரலாக பரவுகிறது.

அந்த வகையில் சமீபத்தில் அவர் தன் குடும்பத்தினருடன் இணைந்து சூப்பர் சிங்கர் மற்றும் மிஸ்டர் & மிஸ்சஸ் சின்னத்திரையில் போட்டியாளராக கலந்து கொண்ட ரோஷ்னி குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அந்த புகைப்படம் தான் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. காரணம் மா.க.பா ஆனந்திற்கு சூசன் என்பவருடன் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளது அனைவருக்கும் தெரிந்த தகவல். ஆனால் அது யார் என்பது இதுவரை தெரியாமல் இருந்து வந்தது. 

அந்த புகைப்படத்தில் மகள் அனலியா லேகா, மகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதனைப் பார்த்த பலரும் குழந்தைகள் இவ்வளவு பெரியவர்களாக வளர்ந்து விட்டார்களா? என கேள்வியெழுப்பியுள்ளனர்.