கலக்கத்தில் அதானி குழுமம் - 3 நாட்களில் இத்தனை கோடி இழப்பா...? வெளியான அதிர்ச்சி தகவல்...!
அதானி குழுமத்தின் பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் இன்று சரிவுடன் முடிவடைந்தது.
3 நாட்களில் பல கோடிகளை இழந்த அதானி குழுமம் -
அமெரிக்காவை தளமாகக் கொண்ட குறுகிய விற்பனையாளர் ஹிண்டன்பர்க் ரிசர்ச் கொண்டு வந்த தவறான குற்றச்சாட்டுகளுக்கு 413 பக்க பதிலை வெளியிட்ட ஒரு நாள் கழித்து, கடந்த வாரம் செவ்வாய்கிழமை முதல் இன்று வரை, குழும நிறுவனங்கள் கூட்டாக 5.56 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான சந்தை மதிப்பீட்டை இழந்திருக்கிறது.
கடந்த 26ம் தேதி குடியரசு தினத்தையொட்டி வியாழக்கிழமை பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன.
3வது தொடர்ச்சியான வர்த்தக அமர்வில், பெரும்பாலான குழும நிறுவனங்கள் சரிந்தது. அதானி டோட்டல் கேஸ் 20 சதவீதமும், அதானி கிரீன் எனர்ஜி 19.99 சதவீதமும் சரிவை கண்டது. அதானி டிரான்ஸ்மிஷன் 14.91 சதவீதமும், அதானி பவர் 5 சதவீதமும் சரிந்தது.
அதானி வில்மர் பங்குகள் 5 சதவீதமும், என்டிடிவி 4.99 சதவீதமும், அதானி போர்ட்ஸ் (0.29 சதவீதம்) பங்குகளும் பிஎஸ்இயில் சரிந்து விழுந்தன. இருப்பினும், அதானி எண்டர்பிரைசஸ் பங்கு 4.21 சதவீதமும், அம்புஜா சிமெண்ட்ஸ் 1.65 சதவீதமும், ஏசிசி 1.10 சதவீதமும் உயர்ந்தது.
இந்நிலையில், அதானி குழும நிறுவனங்களில் பெரும்பாலானவை சரிவில் முடிந்து, ஒருங்கிணைந்த எம்.கேப் 3 நாட்களில் ரூ.5.56 லட்சம் கோடி குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.