தமிழக அரசு நடவடிக்கையினால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது : அமைச்சர் சேகர் பாபு பெருமிதம்
தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
மாண்டஸ் புயல்
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளில் காற்றின் வேகத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல் 400க்கும் மேற்பட்ட மரங்கள் பல பகுதிகளில் முறிந்து விழுந்துள்ளன. மேலும், பல இடங்கள் புயலால் சேதமடைந்துள்ளது.
இந்த புயல் பாதிப்புகளை அமைச்சர் சேகர்பாபு, வடசென்னை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது வடசென்னையை பொறுத்தவரை மிக குறைந்த அளவிலான மக்களே முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும்.
பெரும் சேதம் தவிர்ப்பு
பாதுகாப்பு காரணங்களுக்காக தான் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறினார் , மேலும் தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
மாண்டஸ் புயல் காரணமாக பலத்த காற்று வீசியதன் காரணமாக 400க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. அந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் எனவும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.