கேஜிஎஃப் படத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய தவறு - தியேட்டருக்குச் சென்ற ரசிகர்கள் அதிர்ச்சி

kgf2 KGFChapter2
By Petchi Avudaiappan Apr 14, 2022 10:31 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

நடிகர் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கேஜிஎஃப் படத்தின் 2 ஆம் பாகம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. 

கடந்த 2018 ஆம் ஆண்டு கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான 'கே.ஜி.எஃப். சேப்டர் 1' திரைப்படம் இந்தியா முழுவதும் பிரமாண்ட வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து பிரஷாந்த் நீல் இயக்கிய இப்படத்தின் 2 ஆம் பாகம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தில் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இந்த படம் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இப்படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தள்ளிப்போனது. இந்நிலையில் தற்போது கேஜிஎஃப் 2 ஆம் பாகம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தியேட்டர்களுக்கு சென்ற ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக 'கே.ஜி.எஃப். சேப்டர் 2' படத்தின் தமிழ் பதிப்பில் பெரிய தவறு நிகழ்ந்துள்ளது.  அதாவது ஸ்கிரீனிங்கில் 'கே.ஜி.எஃப். சேப்டர் 2' என்பதற்கு பதிலாக 'கே.ஜி.எஃப். சபேடர் 2' என்று இருந்தது. இந்த புகைப்படம் தற்போது ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.