Saturday, Jul 5, 2025

24 மணி நேரமாக எரியும் தொழிற்சாலை... வங்கதேசத்தில் பயங்கர விபத்து

Bangladesh fire accident
By Petchi Avudaiappan 4 years ago
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

 வங்கதேசத்தில் உணவு மற்றும் குளிர்பானம் தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்தில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேச தலைநகர் டாக்கா அருகே தொழில்துறை நகரமான ரூப்கஞ்சில் உள்ள அந்த தொழிற்சாலையின் ஒரு பகுதியில் தீப்பற்றி அனைத்து பகுதிகளுக்கும் மளமளவென பரவியது. உடனடியாக இது குறித்து தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் தொழிற்சாலையின் முதல் தளத்தில் தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்டனர்.

24 மணி நேரமாக எரியும் தொழிற்சாலை... வங்கதேசத்தில் பயங்கர விபத்து | Major Fire Accident In Bangladesh

இதில் சிலர் உயிருக்கு பயந்து மாடியில் இருந்து குதித்ததால் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 24 மணி நேரத்தை கடந்தும் தீ எரிவதால் அந்த கட்டிடத்தினுள் சென்று மீட்பு பணியை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுவரை உயிரிழந்த 40 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், 30 பேர் காயமடைந்திருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.