ஓபிஎஸ் அணியில் இணைந்த மைத்ரேயனை நீக்கிய ஈபிஎஸ்

ADMK Edappadi K. Palaniswami
By Irumporai Oct 09, 2022 09:09 AM GMT
Report

ஓ.பன்னீர்செல்வம் அணியில் சேர்ந்த மைத்ரேயனை அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மைத்ரேயன் நீக்கம்

ஓ.பன்னீர்செல்வம் அணியில் சேர்ந்த மைத்ரேயனை அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்.

ஓபிஎஸ் அணியில் இணைந்த மைத்ரேயனை நீக்கிய ஈபிஎஸ் | Maithreyan Removed From The Admk

கட்சியின் சட்டத் திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்.

ஈபிஎஸ் அறிக்கை

கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்.

மைத்ரேயன், இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.