கொரோனா பரவலைத் தடுக்க பள்ளிகளை மூடுவதே முக்கிய நடவடிக்கை - ராமதாஸ்

covid school student Ramadoss
By Jon Mar 22, 2021 01:08 PM GMT
Report

கொரோனா நோய்ப்பரவலைத் தடுக்க பள்ளிகளை மூடுவதே அவசர, அவசிய நடவடிக்கையாகும் என பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 1 வருடமாக மாணவர்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வந்தது இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி தற்போது 9,10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் நடைபெற்று வருகிறது.

ஆனால். தற்போது பள்ளி மாணவர்கள் மத்தியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறதுஇந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி விட்டது. பள்ளி, கல்லூரிகளில் உள்ள மாணவ, மாணவிகள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படும் நிலையில், நோய்ப்பரவலைத் தடுக்க பள்ளிகளை மூடுவதே அவசர, அவசிய நடவடிக்கையாகும்.

12-ஆம் வகுப்பு தவிர மீதமுள்ள அனைத்து வகுப்புகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்பட்டு, தேர்ச்சி அளிக்கப்பட்டு விட்ட நிலையில் பள்ளிகளை நடத்துவது தேவையற்றதாகும். மாணவர்கள் நலன் கருதி அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தற்போது வரும் 22ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை 9,10,11 வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.