தற்கொலைக்கு முந்தைய நாள் நடிகை சித்ராவை சந்தித்த மெயின் ரோடு மினிஸ்டர் - வெளியான அதிர்ச்சி தகவல்..!

AIADMK V. J. Chitra
By Thahir May 14, 2022 09:30 PM GMT
Report

நடிகை சித்ரா தற்கொலைக்கு செய்து கொள்வதற்கு முதல் நாள் அவரை மெயின் ரோடு மினிஸ்டர் சந்தித்ததாக பிரபல செய்தி நிறுவனத்தின் முதன்மை செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பிரபல வி ஜேவாக இருந்து வந்த சின்னத்திரை நடிகையாக புகழ் பெற்றவர் சித்ரா. விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார்.

தற்கொலைக்கு முந்தைய நாள் நடிகை சித்ராவை சந்தித்த மெயின் ரோடு மினிஸ்டர் - வெளியான அதிர்ச்சி தகவல்..! | Main Road Minister Who Met Actress Chitra

இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டலில் தனது காதல் கணவருடன் தனியார் ஹோட்டல் அறையில் இருந்த போது துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சித்ரா தற்கொலை தொடர்பாக கணவர் ஹேம்நாத் மற்றும் அவரின் தாய் கொடுத்த மனஅழுத்தமே காரணம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அடுத்தடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் மதுபோதையில் படப்பிடிப்பு தளத்துக்குச் சென்று சித்ராவிடம் பிரச்சனை செய்தது தெரியவந்தது.

இதனால் ஹேம்நாத்தை விட்டு பிரிந்து வருமாறு அவரது தாய் விஜயா சித்ராவிடம் தெரிவித்ததாகவும்,இருவரால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக சித்ரா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் சித்ராவின் செல்ஃபோனில் இருந்த எஸ்.எம்.எஸ்,புகைப்படங்கள்,ஆடியோ போன்ற ஆதாரங்கள் அழிக்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதனிடையே அரசியலில் முக்கிய அந்தஸ்தில் உள்ள சிலருக்கு சித்ராவின் மரணத்தில் தொடர்பு உள்ளது என்றும், சித்ராவின் தற்கொலைக்கு பின்னால் பண பலம்,அரசியல் பலம் கொண்ட மாஃபியா கும்பல் இருக்கிறது.

அவர்கள் யார் என்று வெளிப்படுத்தினால் என் உயிருக்கு ஆபத்து உண்டாகும் என அந்த கும்பல் மிரட்டுகிறது. என் மீது சுமத்தப்பட்ட பழியை போக்கும் வரை நான் உயிரோடு வாழ விரும்புவதாகவும்,உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஹேம்நாத் போலீசில் புகார் அளித்தார்.

இந்த வழக்கு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க காவல்துறை உத்தரவிட்ட நிலையில் தற்போது இந்த விவகாரம் புயலை கிளப்பி வருகிறது.

இதனிடையே பிரபல செய்தி நிறுவனமான நக்கீரன் முதன்மை செய்தியாளர் அரசியல் சடு குடு நிகழ்ச்சியில் பேசினார், அப்போது அவர்,

சித்ரா வழக்கை போலீசார் பெரிதளவில் விசாரிக்கவில்லை,ஏனென்றால் அது தற்கொலை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள்.

யாராவது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் தான் அது தொடர்பாக வழக்கை நோண்டுவார்கள் என்றார். சித்ராவின் பெற்றோர் நீதிமன்றத்தை நாடலாம்,ஏற்கனவே ஒரு வழக்கு இருக்குன்னு சொல்றாங்க அது எந்த அளவுக்குன்னு தெரியவில்லை.

சித்ராவுக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் எல்லாம் இருக்காங்க.இதில் யாராவது ஒருத்தர் நீதிமன்றத்தை அணுகி சித்ரா மரணத்தில் இருக்க கூடிய மர்மத்தை களைய வழக்கு தொடுத்தால் மீண்டும் சித்ரா வழக்கு சீரியஸ் ஆகும் என தெரிவித்தார்.

இது தொடர்பாக அதிமுகவில் இருந்து விதவிதமான தகவல்கள் வரத்தொடங்கியதாக கூறினார். நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட போது மட்டும் இல்லை விஐபிகள் வந்தது.

அதற்கு முந்தைய நாள் மெயின் ரோடு மினிஸ்டர் வந்துவிட்டு போனதாக வும்,அவர் இந்த விஷயத்தில் வீக்கா இருக்கிறார்.

சமீபத்தில் நடிகை மும்தாஜ் வீட்டில் இருந்த இரண்டு பெண்களை பாலியல் செய்ய சொன்னாங்க என்று சொல்லிட்டு ஒரு வழக்கு பதிவாகியுள்ளது.

அதில் ஒரு பொண்ணு கொடுத்த வாக்குமூலத்தில் மெயின் ரோடு மினிஸ்டர் இருக்காராம். அப்படி,இப்படின்னு நிறைய கதைகள் அதிமுக தரப்பில் இருந்து வருவதாக தெரிவித்தார்.

அப்போ இது எல்லாமே இந்த பொண்ணுக்கு ஒரு விதமான அழுத்ததை கொடுத்ததா? என்பது தெரியவில்லை. இதில் நிறைய அரசியல் முக்கிய விஐபிகளுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்தார்.

இதில் உள்ள உண்மையை கண்டுபிடிக்க யாராவது ஒருத்தர் பொதுநல வழக்கு தொடுத்தால் நீதிமன்றம் உத்தரவின் பேரில் விசாரணை மேற்கொண்டால் முக்கிய விஐபிகள் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.